ஜெர்மனியில் குளிர்கால மேய்ச்சலுக்காக ஆடுகள் வயல்வெளியை நோக்கிச் செல்லும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜெர்மனியில் உள்ள நியூரம்பெர்க் வழியாகக் குளிர்கால மேய்ச்சலுக்காக ஆடுகள் அழைத்துச் செல்லப்படுகின்றன. பாரம்பரியமாகக் கடைப் பிடிக்கப்படும் இந்த நிகழ்வின் போது ஆடுகள் முக்கிய வீதிகள் வழியாக அழைத்துச் செல்லப்படுகின்றன.
அந்த வகையில் நடப்பாண்டும் குளிர்கால மேய்ச்சலுக்காக 600-க்கும் மேற்பட்ட ஆடுகள் அழைத்துச் செல்லப்பட்டன.
அப்போது மக்கள் சாலையில் இருபுறங்களிலும் நின்றவாறு ஆடுகளை வழியனுப்பி வைத்தனர்.
மேலும் பாரம்பரியமாக நடைபெறும் இந்த நிகழ்வினை வீடியோவாகப் பதிவு செய்தும், சிலர் ஆடுகளோடு பேரணியாகவும் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் மந்தையாகக் கொண்டு செல்லப்பட்ட ஆடுகளின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
















