தென் கொரியாவின் சியோலில் ஆண்டின் இறுதியாக நடைபெற்ற ட்ரோன் ஷோ பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.
சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்கும், பொழுதுப் போக்கு நிகழ்வுகளுக்காகவும் சியோலில் ஆண்டுதோறும் பலமுறை ட்ரோன் ஷோ நடத்தப்படுகிறது.
இது மக்களிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அந்த வகையில் சியோல் பெருநகர அரசு ஆண்டின் இறுதி ட்ரோன் ஷோவை சிறப்பாக நடத்தியது.
சியோலின் ஹாங்காங் பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ட்ரோன்களின் அணிவகுப்பு வானை ஒளிரச் செய்தது.
2 ஆயிரம் ட்ரோன்கள் இணைந்து வானில் பல்வேறு உருவங்களைக் காட்சிப்படுத்தின. ஆண்டின் இறுதியாக நடைபெற்ற இந்த ட்ரோன் ஷோவை மக்கள் பலரும் வெகுவாகக் கண்டு ரசித்தனர்.
















