இலவச வீடு வழங்கக் கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாசமுத்திரம் அடுத்த தெற்கு பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் , இலவச வீடு வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அத்துமீறி உள்ளே நுழைந்த திருநங்கைகள், ஆட்சியர் அறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் எச்சரித்த நிலையில் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேட்டியளித்த திருநங்கைகள், திமுக ஆட்சியில் திருநங்கைகளுக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினர்.
கருணாநிதி திருநங்கைகள் எனப் பெயர் சூட்டினார்; ஆனால் அவரது மகன் ஆட்சியில் கஷ்டப்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
















