ஜப்பானின் மவுண்ட் ஃபுஜியில் இலையுதிர் கால அழகினை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஜப்பானின் ஃபுஜி மலைப்பகுதிக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மலை அடிவாரத்தில் ஒரு புறம் நீர் நிலைகளாலும், மற்றொரு புறம் மரங்களாலும் சூழ்ந்துள்ள இந்தப் பகுதிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இலையுதிர் காலத்தையொட்டி அப்பகுதி முழுவதும் ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. திரும்பும் திசையெல்லாம் நிலவும் இதமான காலநிலை பலரையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
அதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஃபுஜி மலை அடிவாரத்தை நோக்கிக் குவிந்து வருகின்றனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கு நிலவும் இதமான காலநிலையை தங்களின் குடும்பத்தினருடன் உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.
வண்ணமயமாகக் காட்சியளிக்கும் மரங்களின் இலைகளை புகைப்படம் எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
















