தமிழகத்தில் 6 கோடியே 4 லட்சத்து 68 ஆயிரத்து 687 S.I.R படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாக்காளர்களுக்கு SIR படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வினியோகித்து வருகின்றனர்.
மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 582 கணக்கீட்டு படிவங்கள் அச்சிடப்பட்ட நிலையில், 94 புள்ளி 31 சதவிகித படிவங்கள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 6 கோடியே 4 லட்சத்து 68 ஆயிரத்து 687 S.I.R படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.
















