சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டுத்தரக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைப் பாதிக்கப்பட்டோர் முற்றுகையிட்டனர்.
செய்யாறு பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம், நகைச் சீட்டு, ஏலச்சீட்டு, பாத்திரச் சீட்டு எனப் பல வகையில் பொதுமக்களிடமிருந்து பணம் வசூலித்துப் பல கோடி ரூபாய் மோசடி செய்தததாகக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தைச் சேர்ந்த அல்தாஃப், அவரது மனைவி ரஃரின் பேகம், கிரிஜா ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மீண்டும் பலரிடம் பணம் வசூலித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, தங்கள் பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்டோர், ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
















