பிரான்சிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்திட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளிக்க உக்ரைனின் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் ஜெலன்ஸ்கி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், ரபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் உடன் ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் வரும் மாதங்களில் ரஷ்ய தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனைக் கணிசமாக வலுப்படுத்தும் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















