மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் மெர்சிடிஸ் பென்ஸின் விண்டேஜ் கார் பேரணி பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.
பழங்கால மெர்சிடிஸ் கார்களை காட்சிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வை Autocar India 2014 ஆண்டு முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வருகிறது.
இது இந்தியாவின் முக்கிய பாரம்பரிய கார் நிகழ்வுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பேரணியில் 95-க்கும் மேற்பட்ட கிளாசிக் பென்ஸ் கார்கள் அணி வகுத்துச் சென்றன.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான மெர்சிடிஸ் பென்ஸின் கிளாசிக் கார் பேரணி வெகுசிறப்பாக நடைபெற்றது. மும்பையின் முக்கிய சாலைகளில் கிளாசிக் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் அணிவகுத்து சென்றன. இது கார் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்தது.
















