பாலஸ்தீன தேசம் உருவாக்கப்படுவதை எதிா்க்கும் தனது நிலைப்பாட்டில் துளியும் மாற்றம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் 20 அம்ச போா் நிறுத்தத் திட்டம் காசாவில் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது.
இந்தச் சூழலில், தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டதால் இஸ்ரேல் என்ற நாடே இருக்கக் கூடாது என்று பாலஸ்தீன அமைப்புகள் கூறிவருவதாகச் சுட்டிகாட்டியுள்ளார்.
அதனால், தனி பாலஸ்தீன தேசம் அமைவதை தொடா்ந்து எதிா்க்கப்போவதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
















