டெல்லி குண்டுவெடிப்புக்குச் சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பான முடிச்சுகளைத் தேசிய புலனாய்வு முகமை கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து வருகிறது.
இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட உமரின் முக்கிய கூட்டாளியான டேனிஷ் என்ற நபரை NIA நேற்று ஸ்ரீநகரில் கைது செய்தது.
இந்த நபர், தாக்குதலுக்கு ஏற்ப டிரோன்களை மாற்றுவதற்கும் மற்றும் சிறிய ராக்கெட்டுகளை உருவாக்கவும் பயங்கரவாத குழுக்களுக்குத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தப் பயங்கரவாத குழுவினர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பயன்படுத்தப்பட்டதைப் போல, டிரோன்களில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை பொருத்தி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்த சதித்திட்டம் தீட்டியது என்பதை NIA கண்டுபிடித்துள்ளது.
டெல்லி மட்டுமின்றி பல நகரங்களை தகர்க்க இந்தப் பயங்கரவாத குழுவினர் சதித்திட்டம் தீட்டினர் என்ற அதிர்ச்சிமிகு உண்மை வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரையும் NIA நெருங்கி வருகிறது.
















