திருச்செந்தூர் தற்காலிக ஆம்னி பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகளும், ஆம்னி பேருந்து ஓட்டுநர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருச்செந்தூரில் தனியாக ஆம்னி பேருந்து நிலையம் இல்லாத காரணத்தால், நகராட்சி அலுவலகம் எதிரில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றிச்செல்ல இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை காரணமாக ஆம்னி பேருந்து நிலையம் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கிறது.
இதனால் பயணிகள் மட்டுமன்றி பேருந்து ஓட்டுநர்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, ஆம்னி பேருந்துகளுக்கெனத் தனி பேருந்து நிலையம் ஏற்படுத்தித் தர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















