ஜப்பானில் 13 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை வெடித்து சிதறியதால் அங்கு விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
ககோஷிமா நகரத்தின் அருகில் உள்ளது சகுராஜிமா எரிமலை. 13 மாதங்களாக அமைதியாக இருந்த இந்த எரிமலை அடுத்தடுத்து 2 முறை நெருப்பு பிழம்புகளை வெளியேற்றியது.
வானில் கிட்டத்தட்ட நான்கரை கிலோ மீட்டர் தூரம் புகை மண்டலமாகவும், புழுதியாகவும் காட்சி அளித்ததால் மக்கள் சிரமமடைந்தனர்.
















