ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளானது.
குள்ளம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கார் பழுது பார்க்கும் கடையில், ஈரோட்டை சேர்ந்த மதிவாணன் என்பவர், தனது காரைப் பழுது பார்க்க விட்டுச் சென்றிருந்தார்.
சோதனை ஓட்டத்திற்காக விக்னேஷ் என்ற ஊழியர், கோபிசெட்டிபாளையம் – ஈரோடு சாலையில் காரை ஓட்டிச் சென்றார்.
தாசம்பாளையம் அருகே சென்றபோது காரின் முன்பகுதியிலிருந்து திடீரெனப் புகை வந்துள்ளது.
இதனைக் கண்ட ஊழியர், காரை உடனே நிறுத்திக் கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
















