கூட்டணி அமைப்பது தொடர்பாகத் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை கடலூரில் நடைபெற உள்ள மாநாட்டில் தெரிவிப்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தேமுதிக அமைக்கும் கூட்டணி தமிழகத்தை நிச்சயமாக முன்னேற்றும் எனவும் தாங்கள் யாருடன் கூட்டணி வைக்கிறோமோ அவர்களால் தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கூட்டணி அமைப்பது தொடர்பாகத் தங்களின் நிலைப்பாட்டை கடலூரில் நடைபெற உள்ள மாநாட்டில் அறிவிப்போம் எனத் தெரிவித்தார்.
















