கோவை மாவட்டம் சூலூர் அருகே விவசாய நிலத்திற்கான பொதுவழி சாதி ரீதியாக அடைக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
காடுவெட்டிப்பாளையம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவர்களுக்குச் சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலத்திற்கு முன்பகுதியில் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர் பொதுவழிப்பாதையை அடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் வழியின்றி தவித்து வரும் குடும்பத்தினர் சாதி ரீதியாகப் பாதை அடைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
















