இந்தியாவின் டெக் தலைநகரான பெங்களூருவில், ஒரே நேரத்தில் அணிவகுத்துச் சென்ற பல Rolls-Royce கார்களின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், பெங்களூருவின் முக்கிய சாலையில் பல Rolls-Royce கார்கள் ஒன்று சேர்ந்து அணிவகுத்துச் சென்றன. ஒவ்வொன்றும் பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்தக் கார்கள் மெதுவாகச் சென்றதால், அப்பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், உலகின் மிக விலை உயர்ந்த கார்களானாலும், பெங்களூருவின் நெரிசலில் அவை சிக்கித்தான் ஆக வேண்டும் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும், இந்த Rolls-Royce கார்களின் மொத்த மதிப்பு, பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் சிலர் கேலி செய்கின்றனர்.
இந்த Rolls-Royce கார்களின் அணிவகுப்பு காட்சி, ஒருபுறம் நாட்டின் செல்வச் செழிப்பைக் காட்டினாலும், மறுபுறம் பெங்களூருவில் நிலவும் உள்கட்டமைப்புச் சவால்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
















