வாக்காளர் கணக்கீட்டு படிவங்களைப் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க சென்னை முழுவதும் 947க்கும் மேற்பட்ட உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவங்கள் தமிழகம் முழுவதும் உள்ள வாக்களார்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை பூர்த்தி செய்வதில் சிலருக்கு சிக்கல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனை தீர்க்கும் விதமாகச் சென்னையில் 947 வாக்குச்சாவடி உதவி மையங்களை அமைத்துள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் இன்று முதல் வரும் 25- ஆம் தேதி வரை உதவி மையங்கள் செயல்படும் என அறிவித்துள்ளார்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் இந்த உதவி மையத்தில் வாக்காளர்களுடைய உறவினர்களின் விவரங்கள் மற்றும் தங்களின் பாகம், வார்டு உள்ளிட்டவற்றை நிரப்புவதற்கு கணினி மூலம் தகவலை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
















