கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமராவதிவிளை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.
















