பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் , அரசு துறையில் 30 சதவீதத்திற்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினர்.
















