திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பேரூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்காலை தூர்வாராததாலும், குடிநீர் தொட்டியைத் தூய்மைப்படுத்தாதாலும் இப்பகுதியில் நோய் தொற்று பரவுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















