மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்கும் வகையில் கட்டுப்பாடு கொண்டுவர மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தன.
இச்சம்பவத்தை தொடர்ந்து மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும் எனக் கட்டுப்பாடு கொண்டுவர மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
தற்போது உள்ள விதிகளின்படி, மருந்து விநியோகிப்பதற்கான உரிமமின்றி இருமல் மருந்தை விற்பனை செய்ய முடியும் என்றும், வரவிருக்கும் புதிய கட்டுப்பாடுகளின்படி, மருந்து விற்பனை நிலையங்களில் மட்டுமே இனி இருமல் மருந்து விற்பனை செய்ய முடியும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
















