திருச்செந்தூர் அருகே வனத்துறை ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நாயுடன் இரண்டு பேர் வேட்டைக்கு சென்றுள்ளனர். இதனை வனத்துறை ஊழியர் ஜெயக்குமார் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், ஜெயக்குமாரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஜெயக்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















