தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
















