கோவை மாவட்டம் ஆனைமலை அருகே விவசாயிகளை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி மக்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர்.
டாப்ஸ்லிப் வனப்பகுதியில் இருந்து யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது உணவு தேடி குடியிருப்புகளுக்குள் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.
கடந்த மாதம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று ஒடையகுளம், குப்புச்சிபுதூர், பாறைப்பதி போன்ற பகுதிகளில் உள்ள கால்நடைகளை அடித்துக் கொன்று இழுத்துச் சென்றது.
இதனையடுத்து, சிறுத்தையை பிடிக்க மூன்று இடங்களில், வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
இந்நிலையில், 20 நாட்களுக்கும் மேலாகப் போக்கு காட்டி வந்த சிறுத்தை போத்தமடை பகுதியில் தனியார் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது.
இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
















