கள்ளக்குறிச்சி அருகே 6-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி பகுதியைச்சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி, தனது வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 பேர், மாணவியை ஆள் இல்லாத வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற மாணவி, இதுகுறித்து வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
மாணவியின் பெற்றோருக்கு வகுப்பு ஆசிரியர் தகவல் தெரிவிக்கவே தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாதேஷ், மகேந்திரன் உள்ளிட்ட 6 பேரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
















