திருவாடானை அருகே ஒரே நாளில் 6 பேரை வெறிநாய் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்ட எல்.கே. நகர், பண்ணவயல் ஆகிய பகுதிகளில் ஆக்ரோஷத்துடன் அலைந்து திரிந்த வெறிநாய், பார்க்கும் நபர்களை எல்லாம் கடித்து குதறியது.
இதில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
















