சாலை வரி விவகாரத்தில் சுமூகமான தீர்வு கிடைக்கும் வரை, வெளிமாநிலங்களுக்கான ஆம்னி பேருந்துச் சேவை இயக்கப்பட மாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆம்னி சேவை நிறுத்தத்தால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், இது முக்கிய பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.
















