தாம்பரம் அருகே நாய்க்குட்டியை மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசிக் கொன்ற செய்த வட மாநில தொழிலாளிமீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலையூர் வேங்கைவாசல் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மாடியில் இருந்த 2 நாய்குட்டிகள், அங்கு பணியில் இருந்த தொழிலாளியைப் பார்த்துக் குரைத்துள்ளது.
இதனால் கோபமடைந்த தொழிலாளி, 2 நாய்க்குட்டிகளையும் சரமாரியாகத் தாக்கி மூன்றாவது மாடியில் இருந்து கீழே வீசி கொன்றுள்ளார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், வடமாநில தொழிலாளி ராம் ஜுல்பிகர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















