மதுரை திருப்பரங்குன்றம் மலையில் எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்ற விவரம் இல்லாததால் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கார்த்திகை தீப திருநாளில் திருப்பரங்குன்றம் கோயில் மலை உச்சியில், தீபம் ஏற்ற அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தொடர்ச்சியாகக் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நடப்பாண்டுக்கான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், வரும் 25ம் தேதி கார்த்திகை தீப விழா கொடியேற்றத்துடன் தொடங்கும் எனவும், டிசம்பர் 3ம் தேதி மலையில் தீபம் ஏற்றப்படும் எனவும் அறநிலையத்துறை செய்தி வெளியிட்டது.
எனினும் நீதிமன்றம் உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றப்பட உள்ளதா அல்லது மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றப்படுமா என்ற தெளிவான விளக்கம் இல்லாததால் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
















