குரூப் 2, குரூப் 2ஏ காலிப்பணியிடங்களை அதிகரித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குரூப் 2, குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள் 645-ல் இருந்து ஆயிரத்து 270-ஆக உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
















