திருநெல்வேலியில் கிரேன் லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையால், பெண் ஒருவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியின் மகிழ்ச்சிநகர் பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் கடைக்குச் சென்று விட்டுச் சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கிரேன் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் செல்வி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்துக்குக் கிரேன் லாரி ஓட்டுநர் ஹெட்போன் அணிந்தபடி பாடல் கேட்டுக் கொண்டுஅஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கியதே காரணம் எனக் கூறப்படுகிறது.
விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
















