திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தினை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு செய்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை மாவட்டம் ஏழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூண் பகுதியையும், , உச்சி பிள்ளையார் கோயில் பகுதியையும் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் ஆய்வு செய்தார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















