மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள்மீது பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னார் பேருந்து நிலைய நடைமேடை முன்பு ஏராளமானோர் பேருந்துக்காகக் காத்திருந்தனர்.
அப்போது நடைமேடை அருகே வந்த பேருந்துக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது திடீரென மோதியது.
இந்த விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விபத்தின் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
















