சென்னை வி.எஸ். மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான அதிநவீன ரோபோட்டிக் முறையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தொடங்கி வைத்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் வி.எஸ்.மருத்துவமனை, ரோபோ உதவியுடன் செயல்படும் நவீன சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரோபோட்டிக் மூலம் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மையத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பேசிய ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுந்தர், இதன் மூலம் துல்லியமான கருவிகளைப் பயன்படுத்தி எலும்புகளைச் சரியாகச் சீரமைக்க முடிவதால், சிகிச்சைக்குப் பின் விரைவாக நோயாளிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் எனத் தெரிவித்தார்.
















