பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியைக் கண்டித்து சிதம்பரத்தில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் என்பவர் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரது படத்தை எரித்துச் சிதம்பரத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.
















