கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 13வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கார்த்தி, முத்தையா ஆகியோர், அதே பகுதியை சேர்ந்த 13வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கார்த்தி, முத்தையா ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
















