மேலூர் அருகே உயிரிழந்த கோயில் காளையை மேளதாளம் முழங்க ஊர்மக்கள் அடக்கம் செய்தனர்.
உறங்கன்பட்டி மந்தை கருப்பண்ண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான புல்லட் காளை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது.
இந்நிலையில் உறங்கான்பட்டி, தர்ம சானப்பட்டி, புதுப்பட்டி, அழகிச்சி பட்டி, கட்டாணி பட்டி ஆகிய 5 கிராம மக்கள் வேலைக்குச் செல்லாமல் காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மேளதாளம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
















