சென்னையில் நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபடி வீடியோ வெளியிட்ட இளைஞரையும் வீடியோவை எடுத்த சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.
மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்த பரத், வழக்கு விசாரணைக்காகக் கடந்த திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
அப்போது, பரத், தான் குற்றவாளி கூண்டில் நின்றிருப்பதை, வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குற்றவாளி பரத்தையும், வீடியோ எடுக்க உதவியாக இருந்த சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், சிறுவனைச் சென்னை கெல்லிஸ் பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
















