பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ரிவால்வர் ரீட்டா படத்தின் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், AI தான் ரொம்ப கொடியதாக இருக்கிறது என்றும் சமந்தா மற்றும் தான் எடுத்த புகைப்படத்தை morphing செய்து மாற்றிப் பதிவு செய்திருப்பதை பார்த்தால் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார்.
வெளிநாடுகளை பார்க்கும்பொழுது இங்கே பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாகத் தான் இருக்கிறது…. அது மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
விமர்சனங்களைக் கண்டு கொள்ள மாட்டேன் என்று கூறிய கீர்த்தி சுரேஷ் X தளத்தில் வரும் விமர்சனங்களை கண்டு கொள்ளவே மாட்டேன் என்றும் கூறினார்.
நாய்கள் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறிய கீர்த்தி சுரேஷ், தெரு நாய்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வரும் பொழுதுதான், இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது என்று தெரிவதாகக் கூறினார்.
















