தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூலில் பருத்திக்கு போதிய விலை கிடைக்காததால் விரக்தியடைந்த விவசாயி 3 ஏக்கர் பரப்பளவிலான பருத்து செடிகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தி உள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து பருத்தி இறக்குமதி அதிகரித்துள்ளதன் காரணமாக உள்நாட்டில் உற்பத்தியாகும் பருத்திக்கு போதிய விலை கிடைக்க வில்லையெனக் கூறப்படுகிறது. இதனால் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் நகார்கர்னூல் மாவட்டம் திம்மாபேட்டை அடுத்த அவஞ்சா கிராமத்தில் விவசாயி ஒருவர் தான் பயிரிட்டிருந்த பருத்தி செடிகளை தீ வைத்து அழித்தார்.
போதிய விலை கிடைக்காததாலும், கூலிக்கு ஆட்கள் கிடைக்காததாலும் விரக்தி அடைந்த அந்த விவசாயி வைக்கோல்களை பருத்தி செடியின் மீது பரப்பித் தீயிட்டு கொளுத்தினார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
















