கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், தனது கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநில கட்சித் தலைவராகப் பணியாற்றி வருவதாகவும், மற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
தாம் நிரந்தரமாகத் தலைவர் பதவி வகிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முற்பட்டதாகவும், ஆனால் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சிறது காலம் பதவியில் தொடருமாறு கேட்டுக்கொண்டதாகவும் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
















