பெங்களூருவில் மாநகராட்சிக்கு 31 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்த, மந்திரி மாலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சொத்து வரி பாக்கி வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அதிகாரிகள், பாக்கியை வசூலித்து வந்தனர்.
இந்த நிலையில், மல்லேஸ்வரம் சம்பிகே ரோடு பகுதியில் உள்ள பிரபல மந்திரி மால் 31 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்துள்ளது.
பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், மால் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக அதிகாரிகள் மாலுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
















