நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பந்தலூர் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இந்தநிலையில் வனப்பகுதியை ஒட்டி இந்திரா நகர் பகுதியில் சிலர், சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதாகவும் இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















