மதுரை மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் கபடி மைதானம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றதாகக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மைதானம் அமைக்க மாவட்ட நிர்வாகம், 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்ததாகவும் ஆனால் மைதானத்தை சுற்றி 50 செங்கற்கள் மட்டுமே அமைக்கப்பட்டு பணி நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அவர்கள் புகாரளித்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















