மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில், குளிர்காலம் முன்கூட்டியே தொடங்கியதால், இயற்கை எழில் காட்சிகள் காண்போரைக் கவர்ந்து வருகின்றன.
இரவு முழுவதும் நிலவிய கடும் பனியின் காரணமாக, அதிகாலை நேரங்களில் இயற்கை காட்சிகள் மெருகேறியுள்ளன.
மேலும், கொடைக்கானலின் கோக்கர்ஸ் வாக் பகுதிகளில், மலைகளின் இடுக்குகளுக்கு இடையே மேகக் கூட்டங்கள் வெண்மையான பஞ்சுப் போல மிதந்து செல்லும் காட்சி கண்களைக் கவரும் விதமாக அமைந்துள்ளது.
இந்த மாற்றங்கள் கொடைக்கானலின் அழகை மேலும் அதிகரித்துள்ளன. வரும் நாட்களில் இங்கு அதிக அளவு குளிர் நிலவும் என்பதால், இந்த ரம்மியமான கால சூழ்நிலைகளை ரசிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
















