தமிழகத்தின் கலாச்சார மையமாக சென்னை திகழ்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் தென் மண்டல கலாச்சார மையம் இணைந்து நடத்தும் மார்கழி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் பேசிய ஆளுநர், சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் தலையீட்டால் கலை மற்றும் கலாச்சாரங்கள் மறைக்கப்பட்டன… அவற்றை நாம் மீட்டு காக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தின் கலாச்சார மையமாக சென்னை திகழ்கிறது எனவும் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த கலைகளை காண்பதற்கும் கற்பதற்கும் சென்னைக்கு பலரும் வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
கலைகளுக்கான மாதமாக மார்கழியை கடைப்பிடிக்கிறோம் எனவும் இசை மற்றும் கலாச்சாரம் சார்ந்த பல ஆய்வுகளை இன்னும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாரதம் நமக்கானது மட்டுமல்ல… உலகத்திற்கானது… அதை நாம் போற்ற வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
















