இந்தியாவின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் பீஹாரும் ஒன்றாக இருக்கும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பீஹாரின் முழுமையான வளர்ச்சிக்கான உறுதியுடன், மத்திய அரசின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மாநிலத்தில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் எனக் கூறியுள்ளார்.
பீஹார் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆசீர்வாதத்துடன், நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக பீஹாரை மாற்றுவோம் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
















