அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி மற்றும் சாய் ஆகியோரை தேனாம்பேட்டை அலுவலகத்தில் காவல்துறையினர் எந்தவித விளக்கமும் கூறாமல் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஜெஜெ நகர் காவல் நிலையம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசு தேர்தல் பயத்தின் வெளிப்பாடாகவே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினர்.
அதிமுக-விற்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் ஐடி பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், சட்டம் ஒழுங்கையும், பெண்கள் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய திமுக அரசின் காவல்துறை, தலைநகரில் ரவுடிகள் கத்தியுடன் திரிந்துக் கொண்டிருப்பதை தடுக்க வேண்டிய காவல்துறை, எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மை நிறுவனத்தின் மீது தனது அராஜகப் போக்கைக் காட்டுவது பச்சையான கோழைத்தனம் எனத் தெரிவித்துள்ளது.
















