பொள்ளாச்சி அருகே சிறுத்தை ஒன்று பிடிபட்ட நிலையில் மீண்டும் மற்றொரு சிறுத்தை நடமாடுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த குப்பிச்சிபுதூர், ஒடைய குளம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை ஒன்று கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தது. இதைடுத்து சிசிடிவி மூலம் ஒரு மாத காலமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்ட வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்தனர்.
இந்நிலையில் ஒடைய குளம் பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாடுவது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள விவசாயிகள் அந்த சிறுத்தையையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்தனர்.
















