டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, திண்டுக்கலில் இரண்டு டன் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பெரியகடை வீதியில் துப்பாக்கி மற்றும் பாறைகளைத் தகர்க்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள் விற்பனை கடைகளில் போலீசார் சோதனை செய்தனர்.
இந்தக் கடைகள் வெடி மருந்துகள் விற்பதற்கு உரிமம் பெற்றிருந்த போதிலும், அளவுக்கு அதிகமான வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நான்கு கடைகளில் இருந்து சுமார் இரண்டாயிரம் கிலோ வெடி மருந்துகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
















